23/12/2016

தமிழக அஞ்சல் வட்டத்தில் பணி: ஜனவரி 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் தமிழக அஞ்சல் வட்டத்தில் 2017-ஆம் ஆண்டிற்கான 8 ஸ்கில்டு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Copper & Tinsmith  (Skilled) - 02
பணி: M.V.Electrician(Skilled) - 02
பணி: M.V.Mechanic (Skilled) - 01
பணி: Upholsterer (Skilled) - 01
பணி: Welder  (Skilled) - 01
பணி: Carpenter (Skilled) - 01
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ், பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின் படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5400 - 20,200 + தர ஊதியம் ரூ.1900
தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இந்திய அஞ்சல் வில்லையாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Senior Manager, Mail Motor Service, No.37 (Old No.16/1) Greams Road, Chennai – 600 006”
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 பிப்ரவரி, மார்ச் மாதங்களில்
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadupost.nic.in/rec/SkilledTradesman.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download