04/03/2016

தமிழக சட்டமன்ற தேர்தல் நாள்: மே-16

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 16-ம் தேதியில்,ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி டெல்லியில் அறிவித்தார்.
அசாம்:
அசாமில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டமாக 65 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 4-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 61 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெறும்.

மேற்குவங்கம்:
மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவே இரண்டு நாட்கள் நடைபெறும். அதாவது ஏப்ரல் 4-லும், ஏப்ரல் 11-ல் வாக்குப்பதிவு நடைபெறும்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 52 தொகுதிகளுக்கு 17 ஏப்ரலில் வாக்குப்பதிவு நடைபெறும்.
3-ம் கட்ட வாக்குப்பதிவு 62 தொகுதிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதி நடைபெறும்.
4-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும்.
5-ம் கட்ட வாக்குப்பதிவு 53 தொகுதிகளுக்கு ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும்.
கடைசி மற்றும் 6-ம் கட்ட வாக்குப்பதிவு 25 தொகுதிகளுக்கு மே 5-ம்தேதி நடைபெறும். கூச்பிஹாரில் இந்த கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கேரளா:
கேரளாவில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். 148 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும். மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
* தமிழ்நாடு:
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே-16-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியிலும் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதிகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்தார்.
வெள்ளிக்கிழமை, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தேர்தல் தேதியை அறிவித்து அவர்கள் கூறியதாவது:

5 மாநிலங்களில் 824 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். தமிழகத்தில் வரும் மாதம் தேதி கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் 5.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் தேதி முன்பு வரை போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். தமிழகத்தில் 65,616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
தேர்தல் முன்னேற்பாடுகள்:
5 மாநிலங்களிலும் தரைத்தளங்களிலேயே வாக்குச்சாவடியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாளச் சீட்டு விநியோகத்தை மத்திய தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கும். தேர்தலின்போது வன்முறையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்க ஜிபிஎஸ் கருவி வசதிகளுடன் பறக்கும் படை அமைக்கப்படும்.
நோட்டாவுக்கு தனி சின்னம்:
வாக்குப்பதிவு இயந்திரத்திரத்தில் நோட்டாவுக்கு தனிச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. நோட்டா என்பது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட முறை.
தேர்தல் நடத்தை விதிமுறை அமல்:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

-தமிழ் தி இந்து 

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download