பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலப் பேரவைக் கூட்டம் திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.முன்னதாக மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் மாநிலத் தலைவராக ஏ.எஸ்.ராஜேந்திர பிரசாத்,பொதுச் செயலாளராக டி.எல்.சீனிவாசன்,பொருளாளராக ப.நீதிமணி ஆகியோர் உட்பட இணை செயலாளர்கள்,துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாநில தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் எம்.வி.பால்ராஜ் முன்னிலை வகித்தார். அமைச்சுப்பணியாளர்களுக்கு இணை இயக்குனர், துணை இயக்குனர் ஆகிய பணியிடங்களை வழங்க வேண்டும்.
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் நேர்முக உதவியாளர் நிர்வாகம் என அமைச்சுப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு காவலர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 23, 25 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து பிரதிநிதிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.