02/04/2017

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை செல்போனில் டவுன்லோடு செய்யலாம்: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 9 துறைகள் தோற்றுவிக்கப்பட்டு, கூடுதலாக 36 கல்வியாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.கணினி யுகத்தின் டிஜிட்டல் தேவைகளை பூர்த்தி செய்ய மாணவர்களுக்கு தேவையான பாடப்பொருள் சார்ந்த 950 சிடிக்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.மேலும், 10ம் வகுப்பு மாணவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் மூலம் தங்களது பாடங்களை டவுன்லோட் செய்து படிக்கும் வசதியும் இந்த ஆண்டு பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download