பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்.திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
24-3-17 மாலை சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.ராஜேந்திர பிரசாத் அவர்கள் மற்றும் மாநில பரப்புரை செயலாளர் திரு.எல் ஜி.முருகன் அவர்கள் மற்றும் திருச்சி,புதுக்கோட்டை,அரியலூர்,பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சுமார்150 சங்க உறுப்பினர்கள் 20 பெண் உறுப்பினர்கள் உள்பட அனைவரின் முன்னிலையில் நமது சங்க உறுப்பினர் திரு.பி.சண்முக சுந்தரம் அவர்களை தாக்கிய மணிகண்டம் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா.காளிதாசன் அவர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் ஒரு பிரிவின் தலைவர் திரு அய்யாசாமி அவர்கள் மற்றும் இரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார்.
மாநில தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் நமது பணியாளர்களின் நலன் மற்றும் திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வேண்டுகோள் மற்றும் இரு பிரிவினருக்கும் பரஸ்பர ஒத்துழைப்பு என்ற தொலை நோக்கு சிந்தனையின் காரணமாக கண்டன ஆர்பாட்டத்தைக் கைவிட்டும் பெருந்தன்மையுடன் மணிகண்டம் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு காளிதாசன் அவர்களை மன்னித்தும் அவரை 31-3-17 ல் ஓய்வு பெற அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.இது நமது சங்கத்திற்கும் நமது ஓற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.இது உங்களால்தான் சாத்தியப்பட்டது.இது போன்ற அநாகரீக செயல்களுக்கு இனி வரும் காலங்களில் கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.மாநில அளவில் உரத்த குரல் கொடுத்த மற்றும் நேரில் வருகை புரிந்த அனைவருக்கும் நன்றிகளையும் ,வணக்கங்களையும் தெரிவிக்க கடமைபட்டுள்ளோம்.
இவண்
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்,
திருச்சிராப்பள்ளி மாவட்ட மையம்.