02/01/2017

இரவு காவலர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம்,தலைவர் ரவி தலைமையிலும், மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் முன்னிலையிலும் நடந்தது.மாநில தலைவர் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது: பள்ளி கல்வித்துறை அலுவலகங்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பணிவரன்முறை செய்திட வேண்டும்.
பள்ளி கல்வித்துறை அலுவலகம், பள்ளிகளில் காலியாக உள்ள இரவு காவலர், அரசு உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அமைச்சுப்பணியார்கள், அலுவலக உதவியாளர்கள், நேர்முக உதவியாளர்களை விருப்ப மாறுதல் அல்லது நிர்வாக மாறுதல் செய்திட வேண்டும்.பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நலத்திட்டங்களுக்கு கல்வி மாவட்ட வாரியாக புதிய கட்டடம் ஏற்படுத்த வேண்டும், என்றார்.மாநில பொருளாளர் நீதிமணி, செயலாளர் முருகன், அமைப்பு செயலாளர் குலாம் ரபீக், மாநில துணை தலைவர் கோவிந்தராஜன் மலைராஜா பங்கேற்றனர்.

-தினமலர், சிவகங்கை 26-12-2016

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download