அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் (அரசாணை எண் 105, நாள் 7.11.2016) கூறியிருப்பதாவது:-
அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த 1.9.2016 அன்று சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். அவரது அறிவிப்பின் பேரில், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை காலம் 6 மாதத்தில் (180 நாட்கள்) இருந்து 9 மாதமாக (270 நாட்கள்) முழு சம்பளத்துடன் உயர்த்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர் (7.11.2016) மகப்பேறு விடுமுறையில் இருக்கும் ஊழியர்கள் 9 மாதம் வரை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.