அரசு தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் 3 ஓட்டுநர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.இப்பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனம் ஓட்டும் வகையில் இலகுரக வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும்.
நல்ல கண் பார்வை அவசியம். வயது வரம்பு, பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 30 வரை. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 18 முதல் 35 வரை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 முதல் 32 வரை. விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர், கல்வித்தகுதி, பிறந்த தேதி, முகவரி, தொடர்பு எண், கண் பார்வை திறன் (6/6) தொடர்பான மருத்துவச் சான்று ஆகியவற்றைக் குறிப்பிட்டு பாஸ்போர்ட் அளவுக்கு புகைப்படத்தை ஓட்டி, சுயமுகவரி எழுதப்பட்ட தபால் உறையுடன் ஜூலை மாதம் 19-ம் தேதி மாலை 6 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்குநரின் செயலாளர், “அரசு தேர்வுகள் இயக்ககம், டிபிஐ வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை-6” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.