பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழங்க, புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கல்வி மாவட்டத்தில், 59 பள்ளிகளில் பயிலும், 10 ஆயிரத்து 500 மாணவ, மாணவியருக்கு வழங்க, கோட்டூர் சாலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 50 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.பள்ளி துவங்குவதற்கு முன், அந்தந்த தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்படும். பள்ளி துவங்கிய பின், மாணவ, மாணவியருக்கு, புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
-தினமலர்