05/01/2016

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி  முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையும் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு காலை 9.15 முதல் 1.15 மணி வரையும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு காலை 9.15 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும்.



பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை

மார்ச் 4 - தமிழ் முதல் தாள்

மார்ச் 7 - தமிழ் இரண்டாம் தாள்

மார்ச் 9 - ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 10 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 14 - வேதியியல், கணக்குப் பதிவியல்

மார்ச் 17 - வணிகவியல், வீட்டுப்பாடவியல், புவியியல்

மார்ச் 18 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவியல்

மார்ச் 21 - கணினி அறிவியல், இந்தியக் கலாசாரம்

மார்ச் 23 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்கல்வி

மார்ச் 28 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்

ஏப்ரல் 1 - இயற்பியல், பொருளாதாரம்



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மார்ச் 15 - தமிழ் முதல் தாள்

மார்ச் 16 - தமிழ் இரண்டாம் தாள்

மார்ச் 22 - ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 29 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 4 - கணிதம்

ஏப்ரல் 7 - அறிவியல்

ஏப்ரல் 11 - சமூக அறிவியல்

ஏப்ரல் 13 - விருப்ப பாடம்

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download