தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க, மாவட்ட பேரவை கூட்டம், மாவட்ட தலைவர் சின்னச்சாமி தலைமையில், தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. துணைத்தலைவர் செந்தில்அரசு வரவேற்றார்.
மாநில தலைவர் ராஜேந்திரபிரசாத், பொருளாளர் நீதிமணி, துணைத்தலைவர் சிவக்குமார், இணை செயலாளர் சந்திரசேகரன், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், முரளி ஆகியோர் பேசினர். இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்ததில், மாவட்ட தலைவராக சின்னச்சாமி, செயலாளராக செந்தமிழ் செல்வன், பொருளாளராக ராகவேந்திரன், துணைத்தலைவராக செந்தில்அரசு, காளியப்பன், வெங்கடேசன், இணைசெயலாளராக, ராஜா, அஜீத்குமார், திருநாவுக்கரசு, துர்கா உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்துதல், அரூரை தலைமையிடமாக கொண்டு, புதிய கல்வி மாவட்டம் உருவாக்கி, புதிய பணியிடங்களை உருவாக்க கோருதல் உட்பட, பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.