22/06/2015

கல்வித்துறையில், மாவட்ட வாரியாக தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்திட மாவட்ட வாரியாக கல்வித்துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்திட வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க
மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

18/06/2015

PAY ORDER FOR 710 AND 200 RMSA SCHOOLS

அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை-இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கருவூலத் துறை அறிவுறுத்தியது.தமிழக அரசு ஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால், கருவூலத் துறையின் இந்த அறிவிப்பு
அவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது. இதனால், இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு அழைப்பிதழ்

16/06/2015

பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றவர்களை நமது சங்க மாநில,மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டிய நிகழ்வு புகைப்படங்களாய்...



சந்திப்பு

கௌரவிப்பு

கோவை முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த மதிப்புமிகு திருமதி அ.ஞானகௌரி அவர்கள் சேலம் மாவட்டத்திற்கு மாறுதல் ஆனதைத் தொடர்ந்து,நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.வி.பால்ராஜ் அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரண்டு சென்று வாழ்த்துரை வணங்கி பொன்னாடை போர்த்தி,நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த போது.



நமது சங்கத்தின் சிவகங்கை மாவட்ட அமைப்புக் குழு கூட்டம்

23.05.2015 அன்று சிவகங்கை மாவட்ட அமைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.நமது சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் குலாம் ரபீக்,வரதராசன் ஆகியோர் பங்கேற்பு.மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன்,முருகன்,ராம சுப்ரமணியன்,கந்தசாமி,பட்டாபி ஆகியோர் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.

சந்திப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் அம்மாவட்டத்தின் சங்க நிர்வாகி சந்திரசேகர்,மற்றும் அசோக் குமார் ஆகியோர் அரசு அலுவலர் கழக மாநிலத் தலைவர்(சி&டி) திரு பொ.சௌந்தரராஜன் அவர்களையும்,நமது மாநில தலைவர் எம்.வி.பால்ராஜ்,மாநில பொதுச்செயலாளர் ஏ.எஸ்.ராஜேந்திரபிரசாத்,மாநில பிரச்சார செயலாளர் பி.நீதிமணி ஆகியோரையும் சந்தித்து தங்களுக்காக சங்கம் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார்கள்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download