» Dist.Educational Officer - Preliminary Results Published(Date of Pre.Exam:08.06.2014)
மாவட்டக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி நடைபெற்றது. அதில் 9,773 பேர் பங்கேற்றனர்.
இந்தத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி, அந்த பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்துத் தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட 3,127 பேர் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு வரும் ஜூலை 6,7,8 ஆகிய நாள்களில் சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.