கோவையில் பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட தலைவர் மனோகர் வரவேற்புரையாற்றினார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் அரசு அலுவலர் கழகம் C&D பிரிவு மாநில தலைவர் சௌந்திரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் ராஜேந்திர பிரசாத், மாநில பிரசார செயலாளர் நீதிமணி,மாநில பொருளாளர் அதிகமான்முத்து,தலைமை நிலைய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஓசூர் கல்வி மாவட்டத்தில் வாட்ஸ் ஆப் மூலம் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அலுவலக பணியாளரின் பணி நீக்கத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மே-8 ம் தேதி மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை ஆணையாளர் தரத்தில் நியமிக்க வேண் டும். அமைச்சு பணியாளர்களுக்கு இணை இயக்குனர், துணை இயக்குனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். தோ்வு பணி சுமையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.