தமிழக வரலாற்றில் முதன்முறையாக பள்ளிக்கல்வித் துறையின் 'புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு' ஐ.எஸ்.ஒ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாய் இருப்பவர் அங்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராய் பணியாற்றும் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்.
வளரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து பள்ளிகளையும் இருந்த இடத்தில் இருந்தே நேர்மையாக சோதனை நடத்துவது.. தலைமையாசிரியர் வந்தாலும் சரி, கடைக்கோடியில் இருக்கும் இளைய ஆசிரியர் வந்தாலும் சரி, அவர்களை சந்திக்க பொதுத்தன்மை உருவாக்கியது.. பணிச்சூழலில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இல்லாமல், மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க கணினியை பயன்படுத்துவது.. அலுவலக ஆவணங்களை கணினி மயமாக்கியது என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
நன்றி:சுட்டி விகடன்