தூத்துக்குடியில் பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட மாநாடு டி.ஏ. திருமண மண்டபத்தில் நடந்தது.
மாநாட்டில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சங்க கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். கல்வி அலுவலர் சங்க உதவியாளர் முத்துகுமாரசாமி வரவேற்புரை ஆற்றினார். சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி, அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
மாநாட்டில் திருச்செந்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் தொடங்க வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள அலுவலக பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட 5ம் அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், தமிழ்நாடு அரசு அலுலவர் கழக மாநில தலைவர் செளந்திரராஜன், அண்ணா தொழிற்சங்க நெல்லை மாவட்ட செயலளார் பொன்னுசாமி, முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, கூடுதல் அலுவலர் ரத்தினம், மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு, தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி: www.tutyonline.net இணையதள செய்தி.