29/03/2015

வாட்ஸ்அப்பில் கேள்வித்தாள் அவுட்-உதவியாளர்கள் சஸ்பெண்டுக்கு எதிர்ப்பு: கிருஷ்ணகிரியில் 31ம் தேதி ஆர்ப்பாட்டம்

கல்வித்துறை பணியாளர்கள் சஸ்பெண்ட் கண்டித்து கிருஷ்ணகிரியில் வரும் 31ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட அமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற சங்கத்தின் மாநில தலைவர் பால்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்வுப் பணிகளை பொறுத்தவரை தேர்வு மையத்திற்கு முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் தேர்வறை கண்காணிப்பாளர்களை நியமிப்பதுடன் அலுவலகப் பணியாளர்களின் அலுவல் ரீதியான பணி முடிவடைந்துவிடுகிறது. அலுவலக பணியாளர்களுக்கு தேர்வு மையப் பணிகளை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் அதிகாரமில்லை.

இந்நிலையில் தேர்வுகள் துறை நிர்வாகத்தின் குழப்பத்தின் ஒரு பகுதியாக ஓசூர் கல்வி மாவட்டத்தில் நடந்த முறைகேட்டிற்கு கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இப்படி அரசுத் தேர்வுத்துறை இயக்குநர், அலுவலக பணியாளர்களை கடும் நெருக்கடிக் கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கி வருவதுடன், பொய்யான குற்றச்சாட்டு களை சுமத்தி, அவர்களது குடும்பத்தினரையும் வேதனைக்கு உள்ளாக்கி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, இந்த நெருக்கடியிலிருந்தும், பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்தும் பணியாளர்களை விடுவிக்க கோரியும், அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரின் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அத்துமீறிய நடவடிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் வரும் 31ம் தேதி அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இதையடுத்து தீர்வு காணப்படவில்லையென்றால், மாநிலம் தழுவிய அடுத்த கட்ட போராட்டத்தை திட்டமிட்டு நடத்துவோம். மேலும், பள்ளிக் கல்வித்துறை பணியாளர்களை தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவது பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் கடும் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது.

எனவே இனி வரும் காலங்களில் பள்ளிக் கல்வித்துறை அலுவலக பணியாளர்களை தேர்வுப் பணிகளுக்கு ஈடுபடுத்தக்கூடாது என அரசை வலியுறுத்துகிறோம். இவை அனைத்திற்கும் தீர்வாக பள்ளிக் கல்வித்துறை பணிகளை ஒருங்கிணைத்து சிறப்பான நிர்வாகத்தை நடத்திட ஐஏஎஸ் அலுவலர் ஒருவரை பள்ளிக் கல்வித்துறை ஆணையராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  அப்போது மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரபிரசாத், மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட செயலாளர் முரளி, மாவட்ட பொருளாளர் சரவணமுருகன் உள்பட பலர் இருந்தனர்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download