பள்ளிக் கல்வி இயக்குநராக திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன் இவர் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.
பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த திரு வி.சி.ராமேஸ்வரமுருகன் அவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி,பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள திரு கண்ணப்பன் அவர்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் இணை இயக்குநர், (பணியாளர் நலன்) உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக கடந்த ஆண்டு அவர் பதவி உயர்வு பெற்றார்.