அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) புதிய இயக்குநராக க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்தார். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநராக (மேல்நிலைக் கல்வி) பணியாற்றி வந்த ராஜராஜேஸ்வரி, இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இரண்டு பேரும் வெள்ளிக்கிழமை மாலையே தங்களது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.