திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, கவுன்சலிங் மூலம் நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குரூப்-4 தேர்வுகள் நடந்தது. இதில், 1,395 பேர் தேர்வு பெற்றனர். இவர்களை, தமிழ்நாடு அரசு அமைச்சு பணி சார்பில், பள்ளி கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணியில் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த, 60 பேருக்கு, பணிபுரியும் இடத்தை தேர்வு செய்ய கவுன்சலிங்கில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டது.
திருச்சி அரசு சையது முர்துஷா பள்ளியில், கடந்த, 25, 26ம் தேதிகளில் கவுன்சலிங் நடந்தது. இதில், திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள ஆறு இடங்களுக்கும், வேறு மாவட்டத்தில் காலியாக உள்ள, 54 இடங்களுக்கும், கவுன்சலிங் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டது.