19/07/2014

கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதா என்பதை அறிய

கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1. http://treasury.tn.gov.in/Public/ecstokenno.aspx என்ற தளத்திற்குச் செல்லவும்.
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.
4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.(உங்கள் காசோலைப் புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)
5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.

அவ்வளவு தான் நண்பர்களே! எந்த தேதியில் உங்கள் அலுவலர் கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார், எந்த தேதியில் அது காசாக்கப்படும் என அறியலாம்.

மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறிய முடியும்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download