30/07/2014

தமிழகத்தில் பதவியுயர்வு காரணத்தால் காலியாக உள்ள 15 மாவட்ட கல்வி அலுவலர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிக்க தலைமை ஆசிரியர்கள் நியமன விபரம்

தமிழகத்தில் பதவியுயர்வு காரணத்தால் காலியாக உள்ள 15 மாவட்ட கல்வி அலுவலர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிக்க தலைமை ஆசிரியர்களை நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25-ம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

இதனால் தமிழகத்தில் 15 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலமும்,TNPSC நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுவது வழக்கம்.

பதவி உயர்வு தாமதமாக வருவதால் தற்போது 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு மேல்நிலைப் பள்ளி,உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அந்த நிலையில் பணியாற்றுபவர்களை மாவட்ட கல்வி அலுவலர் கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு: (அவர்கள் தற்போது வகிக்கும் பணியிடம் அடைப்புக்குறிக்குள்)

1) சுப்பிரமணியன் (மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை) & ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை.

2) சுடலைமுத்து (தலைமை ஆசிரியர், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி) & மாவட்ட கல்வி அலுவலர், தூத்துக்குடி.

3) முருகானந்தம் (தலை மை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தருமத்துப் பட்டி, திண்டுக்கல் மாவட் டம்) & மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், திண்டுக்கல்.

4) வளர்மதி (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை) & மாவட்ட கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை.

5) ராஜா (தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, தேவீரப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி.

6) சிவஞானம் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிலூர், திருவண்ணாமலை மாவட் டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை.

7) வனஜா (தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கலையம்புதூர், திண்டுக்கல் மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், பழனி, திண்டுக்கல் மாவட்டம்.

8) லட்சுமி (தலைமை ஆசிரியர், அரசு மேல்ந�லைப்பள்ளி, இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்.

9) நீலவேணி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பழையனூர், சிவகங்கை மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், சிவகங்கை.

10) தமிழ்ச்செல்வன் (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி, கடலூர் மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், கடலூர்.

11) பிச்சையப்பன் (மெட் ரிக் பள்ளிகள் ஆய்வாளர், கடலூர்) & மாவட்ட கல்வி அலுவலர், கடலூர்.

12) பவுன் (தலைமை ஆசிரியர், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சின்னமனூர், தேனி மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், உத்தமபாளையம், தேனி மாவட்டம்.

13) தெய்வசிகாமணி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இலந்தைக்கூடம், அரியலூர் மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அரியலூர்.

14) சங்கரராமன் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வில்லிசேரி, தூத்துக்குடி மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தூத்துக்குடி.

15) ஜேக்கப் அருள் மாணிக்கராஜ் (தலைமை ஆசிரியர், இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி) & மாவட்ட கல்வி அலுவலர், தென்காசி, நெல்லை மாவட்டம்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download