பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், மாவ ட்ட மாநாடு, நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் எலியாஸ் ராஜசேகரன் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் திலகவதி வரவேற்றார்.
(மாநிலத் தலைவர் எம்.வி.பால்ராஜ் அவர்கள் உரையாற்றும் போது எடுத்த படம்)
தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, எம்.எல்.ஏ., பாஸ்கர், தமிழ்நாடு அரசு அலுவலர் கழக மாநிலத் தலைவர் சவுந்திரராஜன், மாநிலத் தலைவர் பால்ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கூட்டத்தில், இணை, துணை மற்றும் உதவி இயக்குனர் மற்றும் அலுவலக மேலாளர் பணியிடங்களை வழங்க வேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, கூடுதல் பணியிடம் வழங்க வேண்டும். கண்காணிப்பாளர் இல்லாத உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, கண்காணிப்பாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் பணியேற்றுள்ள பணியாளர்களுக்கு, தகுதிக்கேற்றவாறு, பணி வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளை கையாள்வதற்கு, மாவட்டம்தோறும் சட்ட அலுவலர் நியமனம் செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கும், பர்சார் பணியிடம் வழங்க வேண்டும். அனைத்து அடிப்படை (துப்புரவாளர்) ஊழியர்களுக்கும், அலுவலக உதவியாளர்களுக்கான முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தேர்வு பணிகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
நாமக்கல்லை புதிய மாவட்டமாக பிரித்தபோது, சி.இ.ஓ., டி.இ.ஓ., டி.இ.இ.ஓ., அலுவலகத்தில் பணியாளர் குறைக்கப்பட்டது.
அவ்வாறு குறைக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் கல்வி மாவட்டத்தை இரண்டாக பிரித்து, திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு, புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.