புதுடில்லி பல்கலையில் மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பை நான்கு ஆண்டுகளாக மாற்றப்பட்ட முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவர்கள், ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இப்பிரச்னையில் பல்கலைக்கும், யு.சி.ஜி.,க்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதலால், டில்லி பல்கலை துணை வேந்தர் தினேஷ்சிங் ராஜினாமா செய்தார். இந்நிலையில், டில்லி பல்கலைக் கழகத்தில் முன்னர் இருந்தபடியே பட்டப்படிப்பை மூன்றாண்டுகளாக நீடிக்க பல்கலை நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து, மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.