22/05/2014

பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்

நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பஸ் பாஸ்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்துதான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலை யை தவிர்க்கும் வகை யில், நடப்பு கல்வியாண்டிற்கான இலவச பஸ் பாஸ் முன்கூட்டியே வழங்கிட பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இதற்காக பஸ் பாஸ் தேவை பட்டியலை ஒவ்வொரு பள்ளியும் முன்கூட்டியே தயாரித்து போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தேவை பட்டியல் தயாரித்து பஸ் பாஸ்கள் அச்சடித்து மீண்டும் மாணவர்களுக்கு வழங்க காலதாமதம் ஏற்படும் என்பதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பஸ் பாஸ் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கு கடந்த கல்வியா ண்டில் வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் வரை 3 மாத காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பழைய பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை அரசு பஸ்கள் ஏற்றி செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பழைய பஸ் பாஸ் காணாமல் போயிருந்தால், பள்ளி சீருடையில் மாணவர்கள் இருந்தால் அந்த மாணவர்களை அரசு பஸ்கள் கட்டாயம் ஏற்றி செல்ல வேண்டும். பஸ் பாஸ் இல்லை என்பதற்காக எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஏற்றாமல் பஸ்கள் செல்லக்கூடாது என்று போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்றனர்.

-தினகரன் 

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download