11/05/2014

நேதாஜியின் ஐ.என்.ஏ. படை தளபதி புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் காலமானார்.

இந்திய தேசிய விடுதலை போராட்ட படையின் தளபதியாக பணியாற்றிய புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் மலேசியாவில் காலமானார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான ஐ.என்.ஏ. எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்கள் அதிகமிருந்த படைக்கு புவான்ஸ்ரீ ஜானகி ஒரு படைத்தளபதியாக பணியற்றினார்.


இவர் மலேசியாவில் 1980-ஆம் ஆண்டு முதல் 1986-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். மலேசிய நாடாளுமன்றத்தின் முதல் இந்திய பெண் உறுப்பினர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தனது 16-ஆவது வயதிலேயே ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாக பதவியேற்று இந்திய-பர்மா எல்லையில் துப்பாக்கி ஏந்தி போர்க்களம் கண்டவர். இந்தியாவின் விடுதலைக்காக அவர் ஆற்றிய சேவைக்காக 2000ம் ஆண்டில் இந்தியாவின் அன்றைய குடியரசு தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் டெல்லியில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

மலேசியாவில் காலமான  புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் வயது 93. அவரது உடலுக்கு மலேசிய இந்திய தூதரக அதிகாரி குருமூர்த்தி, இந்திய தூதரின் பாதுகாப்பு ஆலோசகர் பிரவீன் குமார் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்திய தேசிய ராணுவத்தில் படைத்தளபதியாக பணியாற்றிய வீரமங்கை என்று அவர் மலேசிய மக்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புவான்ஸ்ரீ ஜானகி அம்மையாருக்கு ஈஸ்வர் என்ற மகனும், கவுரி என்ற மகளும் உள்ளனர்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download