''பொறியியலில், 'சிவில்' பாட பிரிவை தேர்வு செய்து, சிறப்பாக படித்தால், உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்,'' என, டில்லி ஐ.ஐ.டி., பேராசிரியர் செல்வம் பேசினார்.
பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, உயர்கல்வி குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது.
பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் துவக்கி வைத்தார்.டில்லி ஐ.ஐ.டி., பேராசிரியர் செல்வம் பேசியதாவது:பி.இ., படிப்பில், சிவில் பாடப்பிரிவுக்கு, முக்கியத்துவம் அளித்து, தேர்வு செய்யலாம். இந்த படிப்பை, சிறப்பாக படித்து முடித்தால், உடனடியாக வேலை கிடைக்கும்.இ.இ.இ., (எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்) பிரிவையும் தேர்வு செய்யலாம். 'அனிமேஷன்' துறை, வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது. இதிலும், மாணவர்கள் கவனம் செலுத்தலாம்.இவ்வாறு, செல்வம் பேசினார்.
-தினமலர்