11/05/2014

தேர்ச்சி விகிதம் குறைவுக்கு குமரி மாவட்டத்தில் 2 தலைமைஆசிரியர்கள் சஸ்பெண்ட்

தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. குமரி மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 95.14 ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட கூடுதலாக 1.11 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து 6ம் இடத்தையே தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாடவாரியாக தேர்ச்சி விகிதம் குறைந்த ஆசிரியர்கள் மீது திடீர் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லீலாவதி, படந்தாலுமூடு டிசிகே பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் கிருஷ்ணதாஸ் ஆகியோர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசிதரன் தனது தலைமை பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் பாட வாரியாக 60 சதவிதத்திற்கும் குறைவாக தேர்ச்சி விகிதத்தை கொடுத்த ஆசிரியர்கள் 12 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் படி முதன்மை கல்வி அதிகாரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் சங்கங்கள் கண்டனம்:

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் பிளஸ்டு தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 1.11 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி அ,திகரித்துள்ளது. தமிழகத்தில் இதர மாவட்டங்களில் இதை விட மோசமான தோல்வி உள்ள போதிலும் அங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம்' என்று தெரிவித்தார்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download