08/05/2014

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு சார்ந்த முழு விபரம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. தமிழகத்தில் மார்ச்-3 முதல் மார்ச்-25 ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றன. மொத்தம் 2,422 தேர்வு மையங்களில் 8.78 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர்.
மாணவர்களின் மதிப்பெண்கள் அனைத்தும் பலமுறை சரிபார்க்கப்பட்டு தேர்வு முடிவுகளை வெளியிட தயார்நிலையில் உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.ரகசிய பார்கோடு எண்களின் மூலம் மாணவர்களுக்குரிய மதிப்பெண் அந்தந்த மாணவருக்குரிய பதிவெண்ணுக்கு வழங்கப்பட்டது.இந்த மதிப்பெண்ணை சரிபார்க்கும் பணிகள் அனைத்தும் புதன்கிழமை மாலையில் நிறைவடைந்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவு எண்ணைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ். மூலம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிந்துகொள்ளும் வசதி:
 மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும்
கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் 53576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே அறியும் வகையில் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு ரூ.3 கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்.

அதோடு 09282232585 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்:
 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14-ஆம் தேதி வரை தங்களது பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகலைப் பெற மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கில விடைத்தாள்களுக்கு தலா ரூ.550-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.275-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள், ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ.305-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.


இதற்கான கட்டணத்தை மாணவர்கள் விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download