புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் பணியாற்றினர்.
புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், முதன்மைக்கல்வி அலுவலகம் உள்ளி ட்ட பள்ளிக்கல்வித்துறை யில் பணியாற்றும் அலுவலர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர். இதேபோல் இன்று (5ம் தேதி), நாளை (6ம் தேதி) ஆகிய நாட்களிலும் தங்கள் கோரிக்கை குறித்து பிரசுரம் செய்த அட்டை யினை அணிந்து பணி செய்ய உள்ளனர்.
மேலும் 11 மற்றும் 12ம் தேதி ஆகிய 2 நாட்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அமைச்சுப் பணியாளர்களுக்கு என இணை இயக்குனர், துணை இயக்குனர் பணியிடம் வழங்கிட வேண்டும். நீதிமன்ற வழக்குகளுக்காக மாவட்டந்தோறும் சட்ட அலுவ லரை நியமனம் செய்ய வேண்டும்.
நீதிமன்ற வழக்குகளுக்காக பணியாளர் களை அலைக்கழிக்க கூடாது. அமைச்சுப் பணியாளர்களுக்கு நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) என்ற பணியிடத்தை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் ஏற்படுத்தித் தர வேண்டும். பள்ளி இரவு காவலர்களுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
கருணை அடிப்படை நியமனம் பணிவரன்முறை விரைவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் இப்போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.