ஊட்டி, : பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட மையத்தின் அவசர கூட்டம் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் ரவி, ரவிச்சந்திரன் மற்றும் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பணிபுரியும் இரவு காவலர், துப்புரவு பணியாளர் ஆகியோரை தேர்வு பணி சம்பந்தமாக எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமலும், உரிய விளக்கத்தை அளிக்க வாய்ப்பு அளிக்காமலும் கடந்த மாதம் 27ம் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்பபெற வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நன்றி:தினகரன்-11.3.2013