எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு விரைவு அஞ்சலில் சான்றுகளை அனுப்பியுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எட்டாம் வகுப்பு தேர்வை, தனித் தேர்வர்களாக எழுத விரும்பியோருக்கு கடந்த
ஏப்ரல் மாதம் தேர்வு நடந்தது. தேர்வில் பங்கேற்ற மாணவ- மாணவியருக்கு உரிய சான்றுகள் நேரடியாக விரைவு அஞ்சல் மூலம் 7ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படுகிறது. சான்றுகள் கிடைக்காதவர்கள், அந்தந்த அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.