20/11/2016

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள்/உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் 15.11.2016 முதல் 02.01.2017 முடிய நடைபெறுதல் ஆணை மற்றும் பயிற்சியில் கலந்து கொள்வோரின் பெயர்ப்பட்டியல்

இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி -41 பணிநாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - 22-வது அணி பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் (இருபாலருக்கும்) 15.11.2016 முதல் 02.01.2017 முடிய நடைமுறைப்படுத்துதல் - பணியாளர்களை பயிற்சிக்கு அனுப்புதல் ஆணை மற்றும் பெயர்ப்பட்டியல் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் சென்னை-6 ந.க.எண்.73149/அ4/இ3/2016,  நாள்.10.11.2016 காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

12/11/2016

DEO EXAM RESULT PUBLISHED | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்விற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

CLICK HERE-DEO EXAM RESULT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட
விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

07/11/2016

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக அதிகரிப்பு: அரசாணை (அரசாணை எண் 105, நாள் 7.11.2016) வெளியீடு

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் (அரசாணை எண் 105, நாள் 7.11.2016) கூறியிருப்பதாவது:-

அடிப்படை விதிகள் - பணிப் பதிவேடுகளை பராமரித்து வருதல் - பணிப் பதிவேட்டில் பதிவுகளை செய்தல் - முறையான படிவங்கள் வரையறைப்படுத்துதல் - பொதுவான வழிகாட்டி குறிப்புகள் - தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு இணையத்தில் பதிவு செய்ய பயிற்சி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப் பதிவேடு விவரங்களை அரசு இணையதளத்தில் பதிவு செய்வது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலகப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த வாரம் டி.இ.ஓ தேர்வு முடிவு

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டிஇஓ) பணியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 2014 ஜூன் 8-ம் தேதி நடத்தப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட். பட்டதாரிகள் இத்தேர்வை எழுதினர். அதில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரம் பேருக்கு 2015 ஆகஸ்ட் 6, 7, 8 தேதிகளில் மெயின் தேர்வு நடத்தப்பட்டது. மெயின் தேர்வு முடிந்து 15 மாதங்கள் ஆகியும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழியிடம் கேட்டபோது, ‘‘டிஇஓ தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியிடப்படும்’’ என்றார்.

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு 9-ம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இத்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தியது. சென் னையில் 325 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 5,296 மையங் களில் தேர்வு நடத்தப்பட்டது.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font