20/04/2016

ஆய்வக உதவியாளராக பணிபுரிபவர்களுக்கு தர ஊதியம் உயர்வு சார்பான அரசாணை எண்.63 நிதி(ஊதியப்பிரிவு)த் துறை நாள்:26.2.2011

தமிழக அரசின் அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு நடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை இணையதளத்தில் அறிவித்துள்ளது.

தமிழக அரசுப்பணி தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.,கடந்த ஆண்டில் நவம்பர் 8ல் குரூப் 1 தேர்வு, ஆகஸ்ட் 1ல் பல்வேறு நிலைகளில் நுாலகர் தேர்வு, ஜூலை 11ல் உதவிபுள்ளியல் அதிகாரி தேர்வு டிசம்பர் 21ல் குரூப் 4 தேர்வு ஆகியவற்றை நடத்தியது. இவற்றிற்கான தேர்வு முடிவுகளை இன்று டி.என்.பி.எஸ்.சி.,இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தி இன்று அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தி இன்று அரசு ஆணையிட்டுள்ளது.
அரசாணை எண்:117 (நிதி/படிகள்) நாள்:20.4.2016. அகவிலைப்படி 119% லிருந்து 125% ஆக உயர்வு.

CLICK HERE -6 % DA-G.Os of Finance Department - Tamil Version

18/04/2016

தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை?

பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு, 45 நாட்கள் வரை பணி மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. அதில், கடந்த ஆண்டுகளில் பயிற்சி பெறாத இளநிலை உதவியாளர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பயிற்சி முகாம், மார்ச், 30ம் தேதி துவங்கியது. பயிற்சிக்கு பெயர் பட்டியல் அனுப்பிய, பல தலைமை ஆசிரியர்கள், பணியாளர்களை உரிய நேரத்தில் விடுவிக்காததால், பல பணியாளர்கள் பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை.

16/04/2016

6239 தற்காலிக பணியிடங்களுக்கு 1.1.2016 முதல் 31.12.2016 முடிய ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2016-17 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அனைத்துப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த கோவை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

தபால் ஓட்டுக்களை விரைவாக அனுப்புங்க: எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்

தேர்தல் பணி செல்லும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தேர்தலின்போது ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பது, வாக்காளர்களுக்கு விரலில் மை வைப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். அரசு ஊழியர்களின் விவரங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே சேகரிக்கப்பட்டு தேர்தல் துறையால் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.

கனிவான வேண்டுகோள்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க இணையதள பார்வையாளர்களுக்கு வணக்கம்.பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்,உயர் அலுவலர்கள் ஆகியோருக்கு கனிவான வேண்டுகோள்.அனைவருக்கும் பயன்படும் வகையிலான எளிதில் கிடைக்காத,முக்கியம் நிறைந்த துறை சார்ந்த அரசு ஆணைகள்,செயல்முறைகள் போன்றவற்றை pdf வடிவில் ஸ்கேன் செய்து pktnas@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி அனைவருக்கும் பயன்படும் வகையில் அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.மறவாமல் தங்கள் முகவரி,பணிபுரியும் இடம்,பதவி,கைப்பேசி எண் ஆகியனவற்றையும் தெரிவிக்கவும்.வாருங்கள் நாம் கரம் கோர்த்து நமது துறையை மேன்மையடையச் செய்வோம்.நாமும் துறையால் நன்மை அடைவோம்.

15/04/2016

பள்ளிகளுக்கான குறைந்தபட்ச நிலம்; அரசின் முடிவை தெரிவிக்க உத்தரவு

பள்ளிகள் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச நிலம் தொடர்பாக, நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் மீது, அரசு எடுத்த முடிவை தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலை பள்ளி நிர்வாக சங்கத்தின் செயலர் ஜோசப் சுந்தர்ராஜ், தாக்கல் செய்த மனு:

50 ஆயிரம் புத்தகங்கள் மாணவர்களுக்கு தயார்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழங்க, புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம்!

தமிழகம் முழுவதும் நாளை துவங்க உள்ள, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களில், வாயில் கூட்டம் நடத்தி, துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க, ஆசிரியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

எட்டாம் வகுப்பு-ஏப்ரல்-2016 - தனித்தேர்வர் தேர்வு கூடம் நுழைவு சீட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணி வரன்முறை செய்யப்படாத ஊழியர் இறந்தால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

சிவகங்கை சண்முகம். திருப்புத்துார் நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) நீதிமன்றத்தில் காவலாளியாக பணிபுரிந்தார். அவரது பணி வரன்முறைப்படுத்தப்படவில்லை.

அரசு ஊழியருக்கு 6% கூடுதல் அகவிலைப்படி உயர்வு சார்ந்த தகவல்

தமிழக அரசு பணியாளர்களுக்கு 01.01.2016 முதல் 6% கூடுதல் அகவிலைப்படி வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகவும்,அதற்கான அரசாணைக்  கோப்பு முதல்வரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அரசாணை வெகுவிரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியருக்கு பதவி உயர்வுக்கான விதிகளை உருவாக்குவது அரசின் உரிமை. அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 2004 முதல் 2014 வரை பட்டதாரி ஆசிரியர்களாக நேரடியாக நியமனம் செய்யப்பட்டவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியராக இருந்து பதவி உயர்வு பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு தனியாக பணி மூப்பு பட்டியல் தயாரிக்க வேண்டும். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் நேரடி பட்டதாரி ஆசிரியர்களுக்கும், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தலா 50 சதவீத இடங்கள் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெலின் தெய்வகுமார், செந்தில், ஜெயச்சித்ரா உட்பட 13 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

2016-17 ஆம் கல்வியாண்டு 1/6/16 அனைத்து பள்ளிகளும் திறப்பு - பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் . தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு 1/5/16 அன்று முதல் கோடை விடுமுறை


CPS ஓய்வு பெற்றவர்கள் பணப்பலன் பெறுவதில் சிக்கல்: விண்ணப்பத்தை நிராகரிக்கும் கருவூல கணக்குத்துறை


Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font